என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா கிரிக்கெட்"
- இந்தியா- பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் 2012-13-க்குப் பிறகு நடைபெறவில்லை.
- நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக இருக்கும். இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடருக்கு இணையாக இந்தத் தொடர் பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல போட்டியை நடத்தும் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் சிறந்ததாக இருக்கும்.
ஆனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக இந்தியா தொடர்ந்த குற்றம்சாட்டியது. மேலும், எல்லையில் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரையில் இருநாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் கிடையாது என இந்தியா தெரிவித்தது.
இதன்காரணமாக 2012-13-க்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடத்தப்படவில்லை. உலகக் கோப்பை, ஆசிய கோப்பை போன்ற ஐசிசி தொடர்பான தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதிக் கொள்கின்றன.
இந்த நிலையில் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் சம்மதம் தெரிவித்தால், நாங்கள் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்த தயாராக இருக்கிறோம் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டின் சிஇஓ தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு காரணமும் உள்ளது. ஏனென்றால் இந்த மாதம் நவம்பர் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆஸ்திரேலியா செல்கின்றன. இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் நவம்பர் 22-ந்தேதி தொடங்குகிறது. அதேவேளையில் பாகிஸ்தான் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.
அப்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான தொடரை நடத்திவிடலாம் என ஆஸ்திரேலியா விரும்புகிறது. 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை 90,293 ரசிகர்கள் போட்டியை கண்டு ரசித்தனர்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் சிஇஓ நிக் ஹாக்லி
மீண்டும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற்றால் நிதி ரீதியாக சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என விக்டோரியா அரசும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. விக்டோரியாவில்தான் மெல்போர்ன் மைதானம் உள்ளது.
நாங்கள் பாகிஸ்தானுக்காக இந்த போட்டியை நடத்துவதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவுக்காக போட்டியை நடத்துவதிலும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களால் உதவ முடியும் என்றால் அது சிறப்பானது. ஆனால், இது இரு நாடுகளுக்கு இடையிலான தொடர். இது மற்றவர்களுக்காகத்தான் (இந்தியா அல்லது பாகிஸ்தான்) நடத்தப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் சிஇஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.
சுழற்பந்து வீச்சாளரான நான் லயன் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதையும், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருதையும் வென்றனர்.
பெண்களுக்கான சிறந்த ஒருநாள் வீராங்கனை விருதை அலிசா ஹீல் வென்றார்.
இதனால் வருகின்றன தொடர்களை ஒவ்வொரு அணிகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆஸ்திரேலியா இங்கிலாந்து சென்று உலகக்கோப்பை தொடரில் விளையாடிய உடன் ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கிறது.
ஆஸ்திரேலியாவிற்கு உலகக்கோப்பை தொடர் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஆஷஸ் தொடரும் முக்கியம். இதனால் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்த உடன், ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் பயிற்சியாளரான கிரேம் கிக்கை, ஆஷஸ் தொடருக்கு வீரர்களை தயார் செய்வதற்கான பணிகளில் ஈடுபடுத்த இருக்கிறது.
இதனால் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கை துணை பயிற்சியாளராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா 2003 மற்றும் 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதை உறுதிப்படுத்திய ஆஸ்திரேலியா கிரிக்கெட், டிராய் கூலே-ஐ பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது. சாகர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகவும், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான விக்டோரியா அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
ஆஸ்திரேலியா இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. அப்போது டிராய் கூலே பயிற்சியாளராக செயல்படுவார். கூலே இதற்கு முன் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் வங்காளதேச பிரிமீயர் லீக்கில் டேவிட் வார்னர் சியால்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அப்போது கேட்ச் பிடிக்கும்போது அவரது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் சொந்த நாடு திரும்பினார்.
இந்நிலையில் நாளை அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருக்கிறார். லேசான காயம் என்பதால் 21 நாட்களுக்குள் முழுமையாக குணமடைந்து விடுவார் என்று கூறப்படுகிறது. உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் இடம்பெற வாய்ப்புள்ளது.
அதற்கு முன் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார். மற்றொரு வீரரான ஸ்மித்தும் முழங்கை காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
சமீப காலமாக ஆஸ்திரேலியா அணி தோல்விமேல் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான தொடரில் விளையாடும் வீரர்களுக்கான ஜெர்சியை மாற்றியுள்ளது. 1980-களில் ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிந்திருந்த ஜெர்சியை போன்று தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
சிட்னி டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இழக்காமல் இருக்க முடியும் என்பதால் ஆஸ்திரேலியா தீவிர சிந்தனையில் உள்ளது. சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், அணியில் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்த்துள்ளது.
ஆரோன் பிஞ்ச் 6 இன்னிங்சில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். மெல்போர்ன் டெஸ்டில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் நீக்கப்பட்டு மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டார். சிட்னியில் இருவரையும் நீக்கிவிட்டு சுழற்பந்து வீச்சாளர் மானர்ஸ் லாபஸ்சேக்னே மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோரை சேர்க்க ஆஸ்திரேலியா ஆலோசனை செய்து வருகிறது.
இதனால் போட்டி தொடங்குவதற்கு முன் ஆடுகளத்தை பார்த்த பின்னர்தான் ஆடும் லெவன் அணி அறிவிக்கப்படும் என ஆஸ்திரேலியா கூறிவிட்டது.
3-வது டெஸ்ட் மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் ஆக வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டது. முதல் இரண்டு டெஸ்டில் இடம்பிடித்திருந்த 13 வீரர்கள் அப்படியே இடம்பிடித்துள்ளனர். அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
இந்தியாவிற்கு எதிரான கடைசி இரண்டு போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. பேட் கம்மின்ஸ், 2. ஆரோன் பிஞ்ச், 3. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 4. மார்கஸ் ஹாரிஸ், 5. ஜோஸ் ஹசில்வுட், 6. டிராவிஸ் ஹெட், 7. உஸ்மான் கவாஜா, 8. நாதன் லயன், 9. மிட்செல் மார்ஷ், 10. ஷான் மார்ஷ், 11. டிம் பெய்ன் (கேப்டன்), 12. பீட்டர் சிடில், 13. மிட்செல் ஸ்டார்க்.
டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ‘நம்பர் 1’ இடத்தில் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
இந்திய அணி ‘நம்பர் 1’ இடத்தில் நீடிக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் ஒரு டெஸ்டில் ‘டிரா’ செய்தால் போதுமானது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால். 120 புள்ளிகளுடனும் முதல் இடத்திலும், ஆஸதிரேலியா 97 புள்ளியுடன் 5-வது இடத்திலும் நீடிக்கும்.
ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால், 110 புள்ளிகளுடன் ‘நம்பர் 1’ இடத்துக்கு முன்னேறும். இந்திய அணி 108 புள்ளியுடன் 3-வது இடத்துக்கு பின்தள்ளப்படும்.
ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் அந்த அணி 108 புள்ளிகளை பெறும். இந்திய அணி 109 புள்ளியுடன் இருக்கும். ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றால் 107 புள்ளிகளை பெறும். இந்தியா 111 புள்ளிகளுடன் இருக்கும்.
இந்த விவகாரத்தில் டேவிட் பீவெர் மீது கடும் விமர்சனம் எழும்பியது. இதனால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் எர்ல் எட்டிங்ஸ் இடைக்கால சேர்மனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று நிரந்தர சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெறும் ஆண்டுக்கூட்டம் வரை சேர்மனாக இருப்பார்.
இந்த பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் சிட்னியில் கனமழை பெய்ததால் டாஸ் கூட சுண்டப்படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்திய வீரர்கள் தங்களது திறமையை பரிசோதிக்க இந்த போட்டி சிறப்பாக இருக்கும் என்று எண்ணிய நேரத்தில், முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்